விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 1084 அறிவியல் மற்றும் கலைப்பிரிவு படிப்புகளுக்கான இளநிலை மாணவர் சேர்க்கை சனிக்கிழமை தொடங்கியது.
கரோனா பொது முடக்கத்தால் நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனை அடுத்து மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை தயார் செய்யப்பட்டு, தகுதி உடையவர்களுக்கு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடக்கிறது.இந்த வகையில் சனிக்கிழமை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி வேதியியல் தாவரவியல், பி.காம் உள்ளிட்ட 14 துறையின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது.அந்தந்த துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தனித்தனியாக கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக விளையாட்டுப் பிரிவுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மூலம் 32 இடங்களுக்கு சேர்க்கை நடைபெற்றது.கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கட்டணம் செலுத்தி சேர்க்கை பெற்றனர்.
தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.