நீட் தேர்வு நுழைவுச் சீட்டு இன்று வெளியான நிலையில், முதல் மூன்று மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்டன.
இதில் வெளியான முதல் மூன்று மணி நேரத்தில் சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சுமார் 9.53 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கும் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.