நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது எனவும், ஜன.,1 முதல் கட்டணம் வசூலித்தவர்களுக்கு உடனடியாக திருப்பி அளிக்கும்படியும் மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலுள்ள சில வங்கிகள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பின் சென்றால், கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த டிச.,30ம் தேதியே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது மேற்கோள் காட்டி, அறிவிப்பை மீறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஜன., 1 முதல் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வசூலித்த பணத்தை, மீண்டும் திருப்பி அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.