NEET மற்றும் JEE ஆர்வலர்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதலும்
மருத்துவ மற்றும் தொழில் நுட்பப் படிப்புகளில் சேர்ந்து சாதிக்கக் காத்திருக்கும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை நடத்தும் NEET மற்றும் JEE போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கியுள்ளனர். கொரோனா மற்றும் ஊரடங்கின் காரணமாக செப். மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள இத்தேர்வுகளுக்காக மனம் தளராமல் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ மாணவியருக்கு, தேர்விற்குத் தயாராகும் வழி காட்டு நெறிமுறைகளை விளக்குகிறது இக்கட்டுரை.
பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் தங்களது வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், ஆசிரியர்களின் நேரடி ஆலோசனை மற்றும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்களைப் பெற மாணவர்கள் மத்தியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது மாணவர்களுக்கு மிகவும் சிக்கலான சவாலை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு, பிட்ஜி பயிற்சி மையத்தின் கோவைக்கிளை, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பிரத்யேக வழிமுறைகளை அதின் திறமை மற்றும் அனுபவமிக்க பயிற்சியாளர்களின் உதவியுடன் தொகுத்து இக்கட்டுரையில் வழங்கியுள்ளது. ஆகவே, உயர் கல்வியை உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. பாடங்களை புரிந்து படித்தல்:
NEET மற்றும் JEE தேர்வுகளைப் பொறுத்த வரையில், அறிவியல் மற்றும் கணித பாடங்களைப் புரிந்து படிக்கும் திறன் மாணவர்களுக்கு மிகவும் அவசியம். இத்தகைய வழிமுறை மாணவர்களின் அடிப்படை அறிவை செறிவூட்டுவதோடு அத்தகைய பாடங்களில் இருந்து கேட்கப்படும் கடினமான கேள்விகளை இலகுவாகவும் முறையாகவும் அணுக உதவுகிறது. எனவே, மாணவர்கள் அறிவியல் பாடங்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளையும் கணித பாடத்தில் உள்ள சூத்திரங்களையும் மனப்பாடம் செய்வதை விட, அவைகளைப் புரிந்து படித்தலே போட்டித் தேர்வை எதிர்கொள்ள அவர்களுக்கான சிறந்த வழி.
புரிந்து கொள்ள கடினமாக உள்ள பாடங்களின் தலைப்புகளை குறித்துக் கொண்டு அவற்றிற்கு எப்படிப்பட்ட அணுகுமுறை தேவை என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது பயிற்சியாளர் உதவியுடன் தெளிவு படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானது. இப்படிப்பட்ட கடினமான தலைப்புகளை மையமாக கொண்டுள்ள மாதிரி வினாத்தாள்களுக்கு விடைகளைக் கண்டறிந்து பயிற்சிமேற்கொள்வதின் மூலம் மாணவர்கள் NEET மற்றும் JEE தேர்வுகளில் நேரத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் அதிக மதிப்பெண்களையும் பெற முடியும்.
2. முறையான திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை:
போட்டித் தேர்வுகளான JEE, NEET, மற்றும் KVPY ஆகியவற்றிற்கு தயாராகும் மாணவர்கள் தங்களால் அடையக் கூடிய எளிய இலக்குகளை முதலாவது திட்டமிட்டு அவைகளை குறித்த நேரத்தில் அடைவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். கடினமான பாடங்களுக்கு அதிக நேரத்தையும் , சுலபமான பாடங்களுக்கு குறைந்த நேரத்தையும் செலவிட பழக்கும் போது, பயிற்சியின்போதும் தேர்வு சமயங்களிலும் சமநிலை மனப்பாங்கோடு கேள்விகளுக்கு பதிலளிக்க இத்தகைய யுக்தி மிகவும் கை கொடுக்கும்.
3. சுயப்பகுப்பாய்வு மற்றும் கூடுதல் பயிற்சி :
ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும் ஒவ்வொரு பயிற்சித் தேர்வு முடிவிலும் கொடுக்கும் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் மாணவர்கள் பின்பற்றுவது மட்டுமல்லாது தங்களது அறிவுத் திறனை வளர்க்க தேவையான வழிகளைக் கையாள வேண்டிய வழிவகைகளைக் குறித்து சுயபகுப்பாய்வு செய்ய வேண்டும்.
அதிக கவனம் தேவைப்படும் பாடங்களில் கூடுதல் ஆலோசனை மற்றும் பயிற்சியை தங்களது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் உதவியுடன் மேற்க்கொண்டு அவற்றில் வெற்றி காண முற்பட வேண்டும். சவால்கள் நிறைந்த பாடங்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்க மாற்ற அவற்றிகென பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கி விடை காணும் வழியை செதுக்குவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு கடின இலக்கையும் சிரமேற்று அடையும் போது, மாணவர்களின் போட்டித் திறன் மேம்படுவதோடு, மன வலிமையும் அதிகரிக்கிறது. போட்டித் தேர்வுகளான JEE மற்றும் NEET ஆகியவற்றில் தடம் பதித்து இமாலய இலக்கை எட்டிய சாதனையாளர்களின் அனுபவங்களை அவ்வப்போது கேட்பதும் படிப்பதும் நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதோடு, தங்களாலும் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும்.
4. சிறந்த பயிற்சி மையத்தை தேர்வு செய்தல் :
JEE மற்றும் NEET போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள், தேசிய அளவில் சாதனையாளர்களை உருவாக்கி வரும் பயிற்சி நிறுவனங்களின் உதவியை தேர்ந்தெடுப்பது தலை சிறந்தது. மேலும், அத்தகைய பயிற்சி மையங்களில் உள்ள ஆசிரியர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் போதிய அனுபவம் மிக்கவர்கள் என்பதையும், வகுப்புகளில் சேரும் முன்பே மாணவர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும், இம்மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறும் வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள் பற்றிய பயனாளர்களின் கருத்தையும் அவர்களின் ஆலோசனைகளையும் சேகரித்து அவற்றின் அடிப்படையில் முடிவெடுப்பது நலம் பயக்கும்.
கூடுதலாக, அப்பயிற்சி மையங்களின் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வைப் பற்றியும் அதன் அடிப்படையில் வழங்கப்படும் சேவைகள், சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை பற்றியும் அறிந்து கொள்வது, தேசிய அளவிளான சிறந்த பயிற்சி மையத்தை மாணவர்கள் தேர்வு செய்ய உறுதுணையாக இருக்கும்.
நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 4800 தேர்வு மையங்களில் NEET தேர்வு எழுதவுள்ள சுமார் 16 இலட்சம் மாணவர்களுக்கும், JEE தேர்வை எழுதவுள்ள ஒன்பதரை இலட்சம் மாணவர்களுக்கும் பிட்ஜியின் கோவைக்கிளை தேர்வில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
NEET, JEE, மற்றும் KVPY போன்ற போட்டித் தேர்வு களுக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் 10 வது மற்றும் 11வது வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கூடுதல் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற, கீழ்கண்ட தொலைபேசி எண்களை அழைத்து பயன் பெறலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.