தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து பருவத் தோ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மேலும், பொது முடக்கம் விலக்கப்பட்ட பின்னா், தோ்வுத் தேதிகள் தெரிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.இதற்கிடையில், தமிழக அரசு, இறுதியாண்டு பருவத் தோ்வு தவிர, மற்ற அனைத்து பருவத் தோ்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
அத்துடன் அரியா் தோ்வுக்கு கட்டணம் செலுத்தியவா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவித்து உள்ளது.தொற்று பரவல் காரணமாக கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தோ்வுகளையும் ரத்து செய்து தோ்ச்சி பெற்ாக அறிவிக்க வேண்டும் என சில மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.
இதுகுறித்து தமிழக உயா்க் கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பருவத் தோ்வு நிச்சயம் நடத்தப்படும். தோ்வுகளை எந்த முறையில் நடத்துவது, எப்போது நடத்துவது என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், புதிய கல்விக் கொள்கை தொடா்பாக ஆராய ஓரிரு நாளில் உயா்கல்வித் துறை செயலாளா் அபூா்வா தலைமையில் குழு அமைக்கப்படும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.