ரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட், நுகர்வோருக்கு அன்லிமிட்டெட் இணையதள சேவையை வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய பிராட்பேண்ட் திட்டங்கள், மாதத்திற்கு 399 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. இந்த புதிய திட்டங்களின் கீழ், வரம்பற்ற இணைய சேவையை, சமச்சீரான வேகத்தில் பெற முடியும். மேலும், 12 ஓ.டி.டி., (OTT) தளங்களுக்கான சந்தாவையும் பெறலாம்.
அதன்படி, ரூ.399 திட்டத்தில், 30 எம்.பி.பி.எஸ்., (Mbps) வேகத்தில் அன்லிமிட்டெட் இணைய மற்றும் வாய்ஸ்கால் வசதி வழங்கப்படுகிறது. ரூ.699 திட்டத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் அன்லிமிட்டெட் இணைய மற்றும் வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியையும் பெறலாம். ரூ.999 திட்டத்தில் வரம்பற்ற இணையத்தை 150 எம்.பி.பி.எஸ்., வேகத்துடன் வழங்குகிறது. மேலும் இதில், வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியும் 11 ஓ.டி.டி., தள பயன்பாடுகளுக்கான சந்தாவும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,499 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற வாய்ஸ்கால் சலுகையும், 12 ஓ.டி.டி., தள பயன்பாடுகளுக்கான சலுகையும் 300 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணைய சேவையையும் பெற முடியும்.
ஓ.டி.டி., தள பயன்பாடுகளை பெற ஜியோ டிவி பிளஸ் (JioTV Plus) வழியாக அணுகலாம். இதில், நெட்பிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி., ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ், வூ, ஆல்ட்பாலாஜி, சன் என்.எக்ஸ்.டி., லயன்ஸ்கேட் பிளே, ஷெமரூ மற்றும் ஹோய்சோய் ஆகியவை அடங்கும்.ஓ.டி.டி., சேவையை ஆன்லைனில் அணுக, ஜியோ பைபர் செட்டாப் பாக்சைப் பெறுவதும் இந்த திட்டங்களில் அடங்கும். செப்., 1 முதல் இந்த புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வருகிறது. இதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 நாள் இலவச சேவையை ஜியோ வழங்குகிறது. அதில், 150 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணைய சேவையையும், 4கே செட்டாப் பாக்சும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வசதியும் கிடைக்கும்.
'இதைப் பெற, புதிய வாடிக்கையாளர்கள் திருப்பிப் பெறக்கூடிய தொகையை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் செட்-டாப் பாக்ஸ் மற்றும் ஜியோ பைபர் மோடம் ஆகியவற்றைப் பெறலாம்' என, ஜியோ பைபர் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.