மிக மிக துரிதமாக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட வேண்டும்.
கணினி பயிற்றுநர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர், சட்ட கல்லூரி பேராசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வு, வட்டார கல்வி அலுவலர் என அனைத்து தேர்வுகளிலும்...
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 2013 ம் ஆண்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்கள் காலாவதி ஆகிகொண்டிருக்குறது. 2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வான ஆசிரியர்களுக்கு இது வரை எந்த ஒரு அரசு ஆசிரியர் பணியும் வழங்கவில்லை. அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி ஆடைந்தும் ஆசிரியர் பணி அரசு வழங்கவில்லை.
கணினி பயிற்றுநர்கள் தேர்வு இணையவழி நடந்தது 23.06.2019, ஆனால் இதுவரை கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் கிடைக்கவில்லை.
வட்டார கல்வி அலுவலர் தேர்வுகள் 14.02.2020 முதல் 16.02.2020 வரை இணையவழி நடைபெற்றது, இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை.
தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அதிகமான ஆசிரியர்கள் வேலை இல்லாமல், மாத சம்பளம் ஏதுமில்லாமல் இருக்கிறார்கள். சிலர் கூலி வேலையும் பார்த்து வருகிறார்கள்.
இப்படி பட்ட சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதி வேகமாக செயல்பட்டு, ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு, ஆசிரியர்களின் துயரை குறைக்க வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை பொறுத்தவரை மாவட்ட தலைமை கல்வி அலுவலகம்( CEO OFFICE) வழியாக தான் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
தற்போது உள்ள தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகளின் படி, மாவட்டங்களுக்குள் மக்கள் சென்று வர முழுமையான அனுமதி உள்ளது.
ஆசிரியர்களின் குறைகள் மற்றும் தமிழக அரசின் தளர்வுகளின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதி வேகமாக செயல்பட்டு, ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டும், வேலையில்லாமல் இருக்கும் மற்ற ஆசிரியர்களின் துயர் துடைக்கவும் அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.