1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு எப்போது வகுப்புகள்... கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரும் 31ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கையை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதிக்குள்ளாக சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உறுதி செய்ய உள்ளனர். மாணவர்கள், தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய செப்டம்பர் 4-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும், கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags