ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்த கோரிக்கை
கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்த பின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் மே மாத இறுதியில், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.ஜூன் இறுதிக்குள், பதவி உயர்வு, பணியிட மாறுதல் பெற்றவர்கள், அந்தந்த புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர வேண்டும்
.ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள இச்சூழலில், வரும் செப்., இறுதி வரை, மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், கலந்தாய்வு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மத்வராயபுரம், தொண்டாமுத்துார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குறிச்சி, தடாகம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கிணறு உட்பட, 20க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.