தமிழகத்தில் தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் வழங்க வேண்டும்' என, உயர்கல்வி அமைச்சர்அன்பழகனை, கல்லுாரி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.
மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்க செயலர் ராஜகோபால், அமைச்ச ருக்கு அனுப்பியகடிதம்:தமிழகத்தில் கொரோனாவால் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. நேரடி விண்ணப்ப முறைக்கு தடை விதித்து, 'ஆன்லைன்' விண்ணப்ப முறை அமல்படுத்தப்பட்டது.கிராமப்புற மாணவர்கள், நகர் பகுதிக்கு வந்து, தனியார் ஆன்லைன் மையங்களில், 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கின்றனர்.
பொது பஸ் போக்குவரத்தும் இல்லை.'ஆன்லைன்' பதிவு உட்பட பல்வேறு நடைமுறை சிக்கலால் தனியார் கல்லுாரிகளில், 30 சதவீதமே மாணவர் சேர்ந்துள்ளனர். இது உயர்கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆக., 24 முதல் ஆன்லைன் வகுப்பு துவங்க, மதுரை காமராஜ் பல்கலை உத்தர விட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல. இப்பல்கலைக்கு கீழ், 53 தனியார் கல்லுாரிகள் உள்ளன.ஜூலை, 20ல் ஆன்லைன் பதிவு துவங்கியது.
ஆக., 1 முதல், 10 வரை சான்றிதழ் பதிவேற்றம் நடந்தது. 'நெட்ஒர்க்' பிரச்னையால் பதிவேற்ற பணிகள் ஸ்தம்பித்துள்ளன. எனவே, மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும்.தனியார் கல்லுாரிகள்சேவை மையங்கள்துவங்கி, கட்டணமில்லா ஆன்லைன் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.செப்., 10க்கு பின் அல்லது தனியார் கல்லுாரிகளில், 90 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்த பின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.