1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உடல் எடையை குறைக்க உதவும் எலுமிச்சை: விவரங்கள் இதோ..!

 உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை சாறு நல்ல பலனை கொடுக்கக் கூடியது. 

உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் இயற்கை முறையையே பின்பற்றலாம். அதற்கேற்ற உணவுகள், உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் எளிதான, சரியான தீர்வு எலுமிச்சைதான். இதற்கு நீங்கள் அதிக பணமோ, நேரமோ செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எலுமிச்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் எலுமிச்சை சாறு குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். எலுமிச்சை சாறில் குறைந்த அளவிலான கலோரிகளே காணப்படுகின்றன. அதனால் மற்ற பானங்களை விட இது உடலுக்கு சிறந்தது.

எலுமிச்சை சாறு:
சூடான அல்லது குளிர்ந்த நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் அதில் புதினா இலைகள், சிறிய துண்டு இஞ்சி அல்லது தேன் கலந்து கொள்ளலாம். இல்லையென்றால் எலுமிச்சை சாறு மட்டும் கலந்து குடிக்கலாம். குளிர்ந்த நீரை விட சூடான நீர் இன்னும் அதிக பலனை தரும்.

Lemon

இதன் பிற பயன்கள்:

உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் எலுமிச்சை நல்லது.

தலைசுற்றல், வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி கிடைக்க இது உதவும். 

ஜீரண சக்தியை அதிகரிக்கும் பண்பும் இதற்கு உண்டு.

எலுமிச்சை சாறை நீரில் கலந்து வாயில் ஊற்றி கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags