கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இதன் காரணமாக நாளை முதல் சென்னையில் பேருந்துகள் இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போக்குவரத்து கழகம் செய்து வருகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள சென்னை போக்குவரத்து கழகம், நாளை 100% போக்குவரத்து ஊழியர்களுடன் 3 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
பேருந்தில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்கும் வகையிலும், இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பின்பக்க வாயில் வழியாக ஏறும் போது கிருமி நாசினி வழங்கப்படும்; பின்னர் பயணம் முடியும் போது முன்பக்க வாயில் வழி பயணிகள் இறங்க வேண்டும். பேருந்துகள் ஒவ்வொரு நடை இறுதியில் கிருமி நாசினி கொண்டு பேருந்து முழுவதுமாக சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை எனவும் பேருந்துகளில் பாஸ் பெற்று அளவில்லா பயணம் மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.