பணியில் இருந்து விலகிய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பணப்பலன் பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் 2003 ஏப்.1ல் அமல்படுத்தப்பட்டது. இத்தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஆசிரியர்கள் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஈடாக அரசு 10 சதவீத தொகையை வழங்குகிறது.பணியில் இருந்து நீக்கப்பட்டாலோ இறந்தாலோ ராஜினாமா செய்தாலோ பிடித்தம் செய்யப்பட்ட தொகை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பங்களிப்பு நிதியை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக துறை தலைவர் அலுவலக தலைவரின் ஒப்புதலுடன் சேவை பதிவேடு ஊழியர் இறந்திருப்பின் அதன் சான்று போன்றவற்றை சம்பள கணக்கு அலுவலகத்தில் சமர்ப்பித்து பணப்பலன் பெறலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.