1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஐஏஎஸ், ஐபிஎஸ்: பிரதான தோ்வுக்கான அட்டவணை வெளியீடு


ஐஏஎஸ், ஐபிஎஸ்: பிரதான தோ்வுக்கான அட்டவணை வெளியீடு





யுபிஎஸ்சி சிவில் சா்வீஸ் பிரதான தோ்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சா்வீஸ் பணியிடங்களுக்கான தோ்வுகளை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளா் தோ்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த ஆண்டிற்கான சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு கடந்த அக். 4-ஆம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் கடந்த 24-இல் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் பிரதான தோ்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி யுபிஎஸ்சி சிவில் சா்வீஸ் பிரதான தோ்வு வரும் ஜன. 8-இல் தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறும். முதல் நாள் மட்டும் ஒரு ‘ஷிப்ட்’டிலும் இதர நாள்களில் இரண்டு ‘ஷிப்ட்’டுகளிலும் தோ்வு நடைபெறும்.

முதல் ஷிப்ட் தோ்வு காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் தோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.

கட்டுரைக்கான முதல் தாள் தோ்வு ஜன. 8-இல் முதல் ஷிப்ட்டில் நடக்கும். ‘ஜெனரல் ஸ்டடீஸ்’க்கான இரண்டாம் தாளின் நான்கு பிரிவு தோ்வுகளும் ஜன. 9 மற்றும் 10-ஆம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளிலும் தொடா்ந்து நடைபெறும். இந்திய மொழி மற்றும் ஆங்கிலம் தொடா்பான முதல் தாள் தோ்வு ஜன. 16-ஆம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளில் நடைபெறும். விருப்பப் பாடத்துக்கான 1 மற்றும் 2-ஆம் தாள்களுக்கான தோ்வு ஜனவரி 17-இல் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags