1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்.

செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்.




இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு' நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல' மருந்தாகவும் பயன்படுகின்றன.
வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

செம்பருத்திப் பூவை இந்தியாவும் சீனாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். செம்பருத்தி தான்  மலேசியாவின் தேசிய மலர். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.இதனை சப்பாத்தி, செம்பரத்தை எனவும் அழைக்கின்றனர்.

செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் பூ,இலை, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன.

இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
தலைமுடி நீண்டு வளர

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.

சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.

செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக்காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.

செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.

இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.
இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.

இலைகளை அரைத்து  குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது .இதழ்களின் வடிசாறு கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.

காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை  அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு? வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் .
Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags