பண்டிகைக் கால விற்பனையில் சீனாவைச் சேர்ந்த இணையதள ஹேக்கர்கள் இந்திய நுகர்வோர்களைக் குறிவைப்பதாக சமீபத்திய அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பண்டிகைக் காலங்களில் இணைய விற்பனை தளங்களான அமேசான் மற்றும் பிலிப்கார்ட் உள்ளிட்டவை பண்டிகைக் கால சலுகைகளை அறிவிப்பு செய்கின்றன. இதில் குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைப்பதால் மக்களும் இந்த சலுகைகளைப் பயன்படுத்தி பொருள்களை வாங்குகின்றனர்.
இந்நிலையில் சலுகைகளைப் பெற அறிமுகப்படுத்தப்படும் அதிஷ்ட சக்கர முறை எனப்படும் ஸ்பின் வீல் குறித்து தில்லியைச் சேர்ந்த சைபர்பீஸ் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
அதில் சீனாவைச் சேர்ந்த இணைய ஊடுருவலாளர்கள் அதேபோன்ற இணைய பாதுகாப்பைத் தாக்கும் வகையிலான சுழலும் சக்கர முறையை அமேசான் இணையதளப் பெயரில் பயன்படுத்தி இணைய மோசடிகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
அந்த சுழலும் சக்கரத்தின் இணைய இணைப்பை பலருக்கு அனுப்புவதன் மூலம் விலை மதிப்பான செல்போன்களை பெற முடியும் எனும் அறிவிப்பால் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை ஆராயாமல் மக்கள் இந்த பாதுகாப்பற்ற இணைய இணைப்புகளை பலருக்கும் அனுப்பி வருவது ஆபத்தானதாகும் என எச்சரித்துள்ள சைபர்பீஸ் அமைப்பு இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்படும் இணைய முகவரிகள் பலவும் போலியானவை எனத் தெரிவித்துள்ளது.
இந்த மோசடிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இணைய தாக்குதல்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படலாம் எனவும் இன்றைய நிலவரப்படி, இந்த இணைப்புகள் இன்னும் செயல்படக்கூடியவையாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய முகவரிகளின் அனைத்து இணைப்புகளும் சீனாவின் குவாங்டாங் மற்றும் ஹெனான் மாகாணத்தில் உள்ள 'ஃபாங் சியாவோ குயிங்' என்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது சைபர்பீஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
"இணைய விற்பனை மோசடிகள் புதியவை அல்ல என்றாலும் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ரகசிய இணையத் தாக்குதலை சீன நிறுவனங்கள் இந்தியாவில் மீண்டும் மேற்கொள்கின்றன" என்று சைபர்பீஸ் அறக்கட்டளையின் நிறுவனரான வினீத் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பண்டிகைக்கால விற்பனை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 காலகட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.61,253 கோடி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.