நீங்கள் விமானத்தில் பயணித்திருக்கலாம், அல்லது படங்களிலாவது பார்த்திருக்கலாம். அப்போது, விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதை கவனித்திருக்கலாம்.
ஏன் அவ்வாறு விமான ஜன்னல் வட்ட வடிவில் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?
இது யதேச்சையான வடிவமைப்பு கிடையாது. இதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.
விமானம் வானில் பறக்கும் போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.
விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதால், விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தமானது அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். இதனால், விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
மாறாக விமானத்தின் ஜன்னல்கள் சதுரமாக இருந்தால், விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் அனைத்து இடங்களுக்கும் பரவாமல், ஜன்னல்களின் மூலைகளில் தாக்கி கண்ணாடியை உடையச் செய்து பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாக்கி விடக்கூடும்.
ஜன்னலின் வடிவமைப்புக்குப் பின்னே, இவ்வளவு பெரிய சங்கதி இருக்கு!
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.