உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் ஒருங்கே கொடுக்கக்கூடிய பொருள்களில் ஒன்று கேரட். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கேரட்டை முழுமையாக சாப்பிடுவது உடல் சூட்டைத் தனிப்பதுடன் சரும பாதுகாப்பை உறுதிப்படுத்தும். உடல் சோர்வைக் குறைக்கும். கலோரி குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்கும்.
தோல் பாதுகாப்பிற்கு கேரட் சிறந்த மருந்து. கேரட்டை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பழச்சாறு செய்து அருந்தலாம்.
கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் உடலுக்கு தேவையான எனர்ஜியினை கொடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கேரட் சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு சேர்த்து குடிக்கலாம். இதிலுள்ள பீட்டா கரோட்டின் உடல் கொழுப்பைக் குறைக்கிறது.
வயிற்றுப் புண், குடல் புண்ணை குணமாக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்றை சுத்தமாகும்.
சருமம் பொலிவு பெறுவதுடன் தோல் சுருக்கங்கள் நீங்கும்.
மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீரகக் கோளாறுகளுக்கு கேரட் ஜூஸ் சிறந்த மருந்து. இதை நோய்கள் வருவதைத் தடுக்கிறது.
எனவே உடல் அழகுடன் ஆரோக்கியத்தையும் பெற தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.