வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கவனமுடன் செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸின் புதிய ரகமொன்று அண்மையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. அந்தப் புதிய வைரஸ் முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.
இதன்காரணமாக பிரிட்டன் உடனான போக்குவரத்தை உலக நாடுகள் பலவும் தற்காலிகமாகத் துண்டித்துள்ளன. இந்நிலையில் புதிய வகைக் கரோனா வைரஸ் என்பது கட்டுப்படுத்த முடியாத ஒன்றல்ல என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால திட்ட இயக்குனர் மைக்கேல் ரியான் புதிய வகை கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் அதே சமயம் கரோனா தொற்று நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் திங்கள்கிழமை தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.