அடுத்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பொறியியல் பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை தெரிவித்திருந்தது.
தாய்மொழியில் தொழில் கல்விக்கான பாடத் திட்டம் வகுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில குறிப்பிட்ட ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் பட்டப் படிப்புக்கான பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாய்மொழியில் படிக்கும் முறையைச் செயல்படுத்த உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும் உயர்கல்வித் துறையின் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு ஒரு மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.