பிளஸ் 1 சேர்க்கை வரும் 24ம் தேதி துவங்கவுள்ள நிலையில், பல பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்கள் முடிந்து விட்டன. இதனால், கூடுதல் பிரிவுகளை துவங்குவதோடு, ஊரடங்கு விடுமுறையை பயன்படுத்தி, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகம் முழுக்க, பத்தாம் வகுப்பு ரிசல்ட், கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது.
இவர்களுக்கு, கடந்த 17ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்படுகிறது.இதை பெற, பள்ளிக்கு வரும் மாணவர்கள், விரும்பும் பாடப்பிரிவை குறிப்பிட்டு, சேர்க்கை படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர். அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களே, 11ம் வகுப்புக்கும் விண்ணப்பிப்பதால், விண்ணப்ப படிவம் விநியோகித்த முதல்நாளே, பல பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்கள், 90 சதவீதம் முடிவடைந்து விடுகின்றன.இதனால் பிற பள்ளிகளில் இருந்து வருபவர்களை, திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, ஒப்பணக்காரவீதி மாநகராட்சிப்பள்ளியில், பிற பள்ளிகளில் இருந்து வரும் மாணவியரை, பெரும்பாலும் ஏற்க முடிவதில்லை.
கூடுதல் பிரிவு வேண்டும் கூடுதல் பிரிவு உருவாக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால், இவர்களுக்கு சேர்க்கையை மறுக்கவும் முடியாமல், விண்ணப்பங்களை பெறவும் முடியாமல் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். ஆகவே, கூடுதல் பிரிவுகள் துவக்க கல்வித்துறை அனுமதிக்க வேண்டுமென்பதே, இவர்களின் கோரிக்கையாக உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:மேல்நிலை வகுப்பில், புதிய பிரிவுகள் துவங்க, கல்வித்துறை அனுமதிக்க வேண்டும். கூடுதல் வகுப்பறை அமைத்து தருவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட செயல்பாடுகளை, பள்ளி திறப்பதற்கு முன்பே செய்யலாம்.அதிக மாணவர்கள் சேர்ந்த பள்ளிகளில், இடவசதிக்கு ஏற்ப, கட்டுமான பணிகளை துவங்கலாம். டிச., வரை, பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால், மாணவர்கள் விரும்பி தேடி வரும் பள்ளிகளை விரிவுப்படுத்தினால் தான், சேர்க்கையை அதிகரிக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''பிளஸ் 1 சேர்க்கை வரும் 24ம் தேதி துவங்குகிறது. விண்ணப்பங்கள் பெறும் போது, குறிப்பிட்ட பிரிவுக்கு, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினால், பிற பிரிவுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்தும், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கூடுதல் பாடப்பிரிவு துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முன்கூட்டியே தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை தேடி வரும் மாணவர்களுக்கு, சேர்க்கை மறுக்காமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.