2019-20ம் நிதியாண்டில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சிடப்படவில்லை எனவும், கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20ம் நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2018 மார்ச் மாத இறுதியில் 33,632 லட்சமாக இருந்தது. 2019 மார்ச் மாத இறுதியில் 32,910 லட்சமாகவும், 2020 மார்ச் மாத இறுதியில் 27,398 லட்சமாகவும் குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மொத்த நோட்டுகள் 2.4 சதவீதமாக இருந்தது. இதுவே முந்தைய 2019 மார்ச் மாத இறுதியில் 3 சதவீதமாகவும், 2018 மார்ச் மாத இறுதியில் 3.3 சதவீதமாக இருந்தது.
மதிப்பின் அடிப்படையில், இந்த பங்கு, 2020 மார்ச் மாத இறுதியில் 22.6 சதவீதமாகவும், 2019 மார்ச் மாத இறுதியில் 31.2 சதவீதமாகவும், 2018 மார்ச் மாத இறுதியில் 37.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
மறுபுறம், 2018ல் துவங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் எண்ணிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையில், ரூ.500 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுக்களின் புழக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2019-20ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதற்கான எந்தவொரு உள்ளீடும் செய்யப்படவில்லை. நோட்டுகளின் உள்ளீட்டு தேவை, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, 13.1 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நோட்டுகள் வழங்குவது முந்தைய ஆண்டை விட 23.3 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.500 நோட்டு மதிப்பில், ரிசர்வ் வங்கி 1,463 கோடி நோட்டுகளை அச்சிடுவதற்கான ஆர்டர் வழங்கியதாகவும், 2019-20ம் ஆண்டில் 1,200 கோடி நோட்டுகள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது. இது 2018-19ம் ஆண்டில் 1,169 கோடி மற்றும் 1,147 கோடி விநியோகத்துடன் ஒப்பிடப்படுகிறது. 100 ரூபாய் நோட்டுகள் (330 கோடி), 50 ரூபாய் (240 கோடி), 200 ரூபாய் (205 கோடி), 10 ரூபாய் (147 கோடி துண்டுகள்) மற்றும் 20 ரூபாய் (125 கோடி) நோட்டுகள் நிதியாண்டில் புழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
சோதனை அடிப்படையில் 100 ரூபாய் மதிப்புள்ள வார்னிஷ் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் வேறு சில இடையூறுகள் காரணமாக அச்சிடுவது தாமதம் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.