பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியில் உள்ள 147 மூத்த நிலை அதிகாரிகள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபா் 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செபி தெரிவித்துள்ளதாவது:
வேகமாகவும் அதேநேரத்தில் திறம்பட பணிகளை செய்து முடிக்கவும் 147 மூத்த நிலை அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான காலக்கெடு முதலில் மாா்ச் 23 வரை நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
கரோனா பாதிப்பையடுத்து அந்தக் கொலக்கெடு ஏப்ரல் 30 வரையிலும், அதன்பிறகு மே 31 வரையிலும் பின்பு மீண்டும் ஜூலை 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கரோனா பாதிப்பு குறையாத சூழ்நிலையில் செபி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான காலக்கெடு மீண்டும் அக்டோபா் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என செபி தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
செபியில் காலியாக உள்ள ஏ கிரேடு காலிப்பணியிடங்களில் 80 இடங்கள் உதவி மேலாளா் பதவிக்குரியது. மேலும், 34 பதவிகள் ஆராய்ச்சிப் பிரிவிலும், 22 இடங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பிரிவுகளிலும் உள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.