ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முதல் படியே சுத்தமாக உணவுப் பழக்கத்தை வளர்ப்பது தான். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வயிறு நிறைய உணவை உட்கொள்ளக்கூடாது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஆயுர்வேதம் உங்கள் நல்வாழ்வுக்கான சில உணவுக் கொள்கைகளைப் பரிந்துரைக்கிறது. இந்த கொள்கைகளானது ஆரம்ப காலத்தில் நாம் பின்பற்றி வந்த ஒருசில அடிப்படை பழக்கங்கள் தான். ஆனால் நவீனமயமாக்கல் காரணமாக இந்த பழக்கங்களை நாம் பின்பற்றுவதை நிறுத்திவிட்டோம்.
சொல்லப்போனால், முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததன் பின்னணிக் காரணமும் இதுவே. இப்போது நாம் காணப் போவது நாம் பின்பற்ற மறந்த அந்த பழக்கங்களைத் தான். நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ் விரும்பினால், தினமும் நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டுமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் பழக்கங்களைப் பின்பற்றுங்கள். சரி, வாருங்கள் இப்போது அது என்ன பழக்கங்கள் என்பதைக் காண்போம்.
நின்று கொண்டே தண்ணீர் குடிக்காதீர்கள்
ஆயுர்வேதம் தவிர்க்குமாறு பரிந்துரைக்கும் முதன்மையான மற்றும் முக்கியமான ஒரு பழக்கம் தான் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது. நீங்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பீர்களானால், உடனே அதை நிறுத்துங்கள். உண்மையைக் கூற வேண்டுமானால், நின்று கொண்டே எதை சாப்பிட்டாலும், அது வயிறு மற்றும் செரிமானத்திற்கு நல்லதல்ல. நின்று கொண்டு ஒருவர் எதை குடித்தாலும், அது நேரடியாக உட்புற செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிக்கும். முக்கியமாக இது திரவ சமநிலையைப் பாதிக்கிறது. இதனால் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும். இப்பழக்கம் இப்படியே தொடர்ந்தால், அது ஆர்த்ரிடிஸ் என்னும் கீல்வாதத்தை ஏற்படுத்தக்கூடும்.
எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுநீர் குடிக்கவும்
பழங்கால ஆயுர்வேத பழக்கங்களுள் ஒன்று தான் எழுந்ததும் சுடுநீரைக் குடிப்பது. ஆனால் மேற்கத்திய கலாசாரங்கள் நுழைந்ததும், இந்த பழக்கங்கள் மெதுவாக மக்களால் கைவிடப்பட்டு விட்டன. ஒருவர் ஒரு நாளை சுடுநீரைக் குடித்து ஆரம்பித்தால், உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பதுடன், அஜீரண கோளாறுகளும் தடுக்கப்படும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இந்த பழக்கம் நல்ல பலனைத் தரும். எ
உட்கார்ந்தே சாப்பிடவும்
உணவை செரிமானமாக்குவதில் உடல் தோரணை முக்கிய பங்கை வகிக்கிறது. வயிற்றின் ஆரோக்கியத்திற்கான சிறந்த உடல் தோரணை என்றால் அது தரையில் அமர்வது தான். உணவை தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால், அஜீரண பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, வாய்வு பிரச்சனைகளும் வராது.
பருவநிலைக்கு ஏற்ப சாப்பிடுங்கள்
ஒவ்வொரு பருவநிலையின் போது கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கேட்டால், நிச்சயம் அது குறைவாகத் தான் இருக்கும். இது ஒரு தவறான பழக்கம். சொல்லப்போனால், கோடைக்காலத்தில் குளிர்ச்சியான உணவுகளையும், குளிர்காலத்தில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான மனதுக்கும், சுறுசுறுப்பான உடலுக்கும், இந்த சமநிலையைப் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம்.
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்
எப்போதுமே உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமாக உணவை உட்கொள்ளக்கூடாது. அதேப் போல் எப்போதெல்லாம் பசியை உணர்கிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் நுரைக் குடியுங்கள். இதனால் அதிகப்படியான பசி கட்டுப்படுத்தப்படும். அதோடு எப்போது கடுமையான பசியில் இருந்தாலும், அரை வயிறு உணவையே உட்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் மிதமான காரமுள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அப்படி சாப்பிடுவதால் உடலால் அந்த உணவை இரவு நேரத்தில் எளிதில் ஜீரணிக்க முடியும்.
சாப்பிடும் போது பேசவோ, டிவி பார்க்கவோ கூடாது
எப்போதும் சாப்பிடும் பொழுது, சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பலர் சாப்பிடும் போது டிவியைப் பார்த்துக் கொடோ, மொபைலை பார்த்துக் கொண்டோ அல்லது ஏதேனும் புத்தகத்தைப் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இது ஒரு கெட்ட பழக்கம். இதனால் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது தெரியாமல் போகும். எனவே எப்போதும் சாப்பிடும் போது கவனம் முழுவதும் சாப்பாட்டில் மட்டும் தான் இருக்க வேண்டும்.
மெதுவாக, மென்று சாப்பிடவும்
இன்று பலர் சாப்பிடுகிறேன் என்று வேகமாக உணவை சரியான மெல்லாமல் விழுங்குவார்கள். இது ஒரு தவறான பழக்கம். உணவை எப்போதுமே மெதுவாக நன்கு அரைத்து தான் விழுங்க வேண்டும். இதனால் செரிமான நொதிகள் செயல்படுத்தப்பட்டு, உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகும். அதோடு வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.