வாகன காப்பீட்டை புதுப்பிக்கும்போது, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை, உரிமையாளர்களிடம் இருந்து பெற வேண்டும் என காப்பீடு நிறுவனங்களுக்கு, காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
விபத்து நேரத்தில், மாசுகட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகி இருந்தால், வாகனங்களின் சேதத்திற்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை எனவும், காப்பீடு பணத்தை திரும்ப கேட்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும், சுற்றுச்சூழல் சான்று அவசியம் என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. காப்பீட்டை புதுப்பிக்கும் போது, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால், வாகனங்களுக்கு காப்பீடு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டியுள்ள ஐஆர்டிஏஐ, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் சிஇஓ.,க்களுக்கும் ஐஆர்டிஏஐ அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்துள்ளது. இதனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவதை அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் . டில்லியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.