இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக பல காலகட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். இரு மொழி கொள்கையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரைவு தேசிய கல்விக்கொள்கையை வெளியிட்ட போது, அதில், மும்மொழி கொள்கை இடம்பெற்றதை சுட்டி காட்டி அதனை தீவிரமாக எதிர்த்தது.
மேலும், தமிழகத்தை பொறுத்தமட்டில், இரு மொழி கொள்கையை கடைபிடிப்போம் என 2019 ஜூனில் கடிதம் எழுதினேன். இரு மொழி கொள்கையை கடைபிடிப்போம் என சட்டசபையில் நடந்த விவாதத்தின் போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.
தற்போது, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருந்தாலும், , மும்மொழி கொள்கையை தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்க மாட்டோம். இரு மொழி கொள்கையையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் ஒட்டு மொத்த உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இச்சூழ்நிலையில், மத்திய அரசுஅறிவித்த தனது புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வோதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையினை மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்தி கொள்ள வேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.