பிரபல ஆன்லைன் நிறுவனமான கூகுளின் ஜிமெயில் கணக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று (ஆக.,20) முடங்கியது
\பயனாளிகள் தங்களது ஜிமெயில் கணக்கில் லாக் இன் செய்ய முடியவில்லை என்றும் மெயிலுடன் படங்கள், பைல்கள் போன்ற விஷயங்களை இணைத்து அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் இன்று காலை 11 மணி முதல் ஜிமெயில் முடங்கி உள்ள நிலையில் ஆஸி., ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இச்சேவை முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜிமெயில் உபயோகிப்பவர்களில் 62 சதவீதம் பேருக்கு அட்டாச்மென்ட் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 27 சதவீதம் பேருக்கு தங்கள் கணக்கை லாக் இன் செய்ய முடியவில்லை என்றும் 10 சதவீதம் பேருக்கு தங்களால் மின்னஞ்சல்களை பெற முடியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
ஒரு எம்.பி.,க்கும் குறைவான சிறிய படங்களைக் கூட பதிவேற்றம் செய்ய 15 நிமிடங்கள் ஆவதாக கூறினர். இரண்டாவது முறை பட்டனை அழுத்தினால் பக்கம் துண்டிக்கப்படுவதாக குறை கூறி உள்ளனர்.
இதனிடையே இப்பிரச்னை தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும். அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், உபயோக்கிப்பாளர்கள் பொறுமை காக்கும் படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.