1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கண் துடிப்பது நல்லதா..? தீர்வு என்ன?

 

கண் துடிப்பது நல்லதா..??


கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப் போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம். வலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம். இதன் காரணம் என்ன? விளக்குகிறார் "பொது மருத்துவர் முருகேஷ்".


கண் இமைகள் ஏன் துடிக்கின்றன?


கண் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அது போல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்று கொண்டிருக்கும்.


இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும் போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்து விட்டு நின்று விடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக் கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை. எப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும் போது, கண் இமைகள் துடிக்கின்றன. நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில் கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம்.


என்ன காரணம்?


மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள் கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக் கூடும்.


தீர்வு என்ன?


கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள். இதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக் கூடிய நோய் அல்ல.


கை வைத்தியமோ, மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால் கூட நார்மல் தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக் கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக் கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். கண்களுக்கும், நரம்பு மண்டலத்துக்கும் என்ன பிரச்னை என மருத்துவர் பரிசோதனை செய்து சிகிச்சையை அளிப்பார்.

Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags