''அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை, வரும், 10ம் தேதி, முதல்வர் வெளியிடுவார்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் மட்டும் தான், முதல்வர் துவக்கி வைத்த, கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி வழியாக, பாடம் நடத்தும் பணி நிறைவேற்றப்பட்டு உள்ளது. உயர்நிலை, மேல்நிலை என, 6,019 பள்ளிகளில், 'ஹைடெக்' ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, மாணவர்கள் அரசு வழங்கிய, 'லேப்டாப்' வைத்து, அனைத்து பாடங்களையும், 'டவுண்லோடு' செய்து படிக்கலாம். இ.பி.எஸ்., முதல்வராக பொறுப்பேற்ற பின், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.'கியூஆர் கோடு' வழியாக, மொபைல் போனில் பாடத்திட்டத்தையும் பதிவிறக்கம் செய்து படிக்க, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய கல்வி கொள்கையில், மொழி கொள்கை தொடர்பாக, முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மற்ற அம்சங்கள் குறித்து ஆராய, நிபுணர் குழு அமைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குழு அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய கல்வி கொள்கை குறித்து, சிறப்பு நிபுணர் குழு அறிக்கை அளித்த பிறகு, முடிவு எடுக்கப்படும். ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை, ஏற்கனவே வாபஸ் பெற்றுள்ளோம். தற்போதைய நிலை அது தான்.மிக விரைவில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மதிப்பெண் அடிப்படையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, 10ம் தேதி, முதல்வர் அறிவிப்பார்.தனியார் பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.