2019-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்காக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. இதில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக நேர்காணல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை 20 முதல் விடுபட்டவர்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். 2019- ஆம் ஆண்டு காலியாக இருந்த 829 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.