இயற்கை தந்த பொக்கிஷம் - இளநீர்
மனித குலத்துக்கு இயற்கை தந்த சுத்தமான சுவையான பானம் தான் இளநீர்.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், வெப்பத்தைத் தணிக்கும். உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின், சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.
மேலும் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? சரி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?
ரத்தத்தை சுத்தீகரிக்கும்
--------------------------------------
இளநீர் மிக மிகச் சுத்தமானது, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.
வயிற்றுப்போக்கு:
---------------------------
வயிற்றுக் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மேன்கனீஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன. மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவும்.
வைரஸ் நோய்கள் :
-----------------------------
இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது.
உடல் வறட்சி:
-------------------------
உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.
இரத்த அழுத்தம்:
---------------------------
இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.
சிறுநீரக கற்கள்:
-------------------------
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும். மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கும், விந்துவை அதிகரிக்கும், மேக நோய்களைக் குணப்படுத்தும்,
சரும பிரச்சனைகள் :
--------------------------------
பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.
புற்றுநோய் :
-------------------
சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.
கொலஸ்ட்ரால்:
----------------------------
மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, இளநீரில் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, ஆதனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.
பொலிவான சருமம் :
---------------------------------
இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களின் கலவை உள்ளன. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாக மின்னும்.
ஜீரண சக்திக்கு
-----------------------
ஜீரண சக்தியை அதிகரிக்கும், ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது, இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன,
கண் நோய்களுக்கு
இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
குறிப்பு:
------------
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.