அஞ்சலக சேமிப்பு கணக்கு இருப்பு தொகை உயர்வு
அஞ்சலக சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை, 500 ரூபாயாக உயர்த்த, 11ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி சேவையில் இறங்கிய அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை, 50 ரூபாயாக இருந்தது. இதை, 500 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த விதிமுறை, 2019 டிசம்பர், 12ல் நடைமுறைக்கு வந்தது. அரசு அளித்த அவகாசத்தின்படி, இந்தாண்டு, டிசம்பர், 11க்குள், அஞ்சலக சேமிப்பு கணக்கு இருப்புத் தொகையை, 500 ரூபாயாக உயர்த்தி கொள்ள வேண்டும்.
இருப்புத் தொகையை உயர்த்தாவிட்டால், 2021 மார்ச் முதல், ஆண்டுதோறும் அபராத கட்டணமாக, 100 ரூபாய் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து கழிக்கப்படும். இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதியாகி விடும்.எனவே, சேமிப்பு கணக்கு துவங்கியவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை, வரும், ௧௧ம் தேதிக்குள், 500 ரூபாயாக உயர்த்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அஞ்சல்துறை அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.