ஏமாறாதீங்க! மோசடி நிதி நிறுவனங்களிடம் ...பேராசையாலும் விழிப்புணர்வு இல்லாததாலும்
மதுரையில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், பேராசையாலும் மோசடி நிதி நிறுவனங்களிடம் பணம் கட்டி ஏமாந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு படையெடுப்பது தொடர்கிறது.'நுாறு ரூபாய் கட்டினால்கூட போதும். மாதா மாதம் வட்டியுடன் அசலையும் தருகிறோம்' என ஆசைவார்த்தை கூறியதை நம்பி மதுரையில் 20 மோசடி நிறுவனங்களிடம் பணம் கட்டி நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர்.
அதேபோல் அனுப்பானடி பகுதி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததும் அரங்கேறியுள்ளது.இதேபோல் இன்னொரு மோசடி செனாய்நகரில் நடந்தது. இங்கு ஜேம்ஸ் மோசஸ் அந்தோணி, குருநாதன், பிரபாகரன், புஷ்பராஜ் ஆகியோர் நடத்திய 'கிளிக் அட்வர்ட் செல்யூசனில்' பணம் செலுத்தி அதன் இணையத்தளத்தில் யூசர் ஐ.டி., பாஸ்வேர்ட் உருவாக்கி 30 வினாடி ஓடும் 25 விளம்பரங்களை தினமும் பார்த்தால் செலுத்தும் முதலீட்டிற்கு ஏற்ப ரிபேட்ஸ் தொகை தரப்படும். அத்தொகை வாரம் தோறும் முதலீடு செய்தவர்கள் வங்கி கணக்கிற்கு வரும். பிறரை இது போல் பார்க்க செய்தால் 1 - 5 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.
இதை நம்பி பலர் ரூ.100 - ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்து ஏமாந்தனர். இதுகுறித்து மதுரை சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.போலீசார் கூறுகையில், ''ரிசர்வ் வங்கி செபி விதிப்படி 12.5 சதவீதத்திற்கு மேல் வட்டி கொடுக்கும் நிறுவனங்களை நம்பக்கூடாது. அரசு அனுமதி பெறாத திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது'' என்றனர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.