கடந்த 2013ம் ஆண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆணைக்காக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் இந்த ஆண்டோடு சான்றிதழ் காலாவதியாவதால் பணி நியமன ஆணையை எதிர்பார்த்துக் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை சந்தித்தார். 2013-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.