நீட் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர்
அடுத்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் டுவிட்டர் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். வெபினார் மூலம் நேரலையில் கலந்துரையாடிய ரமேஷ் பொக்ரியால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் சூழலில் அடுத்தாண்டு (2021) நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகளை பலரும் முன்வைத்தனர்.

இது தொடர்பாக அவர் அளித்த பதில்: அடுத்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை. கடந்த நீட் தேர்வு 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்பு மீண்டும் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் அளித்தோம். நீட் தேர்வை ரத்து செய்தால் அது மாணவர்கள் மற்றும் தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். எனவே, தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
பாடத்திட்டம் குறைக்கப்படுவது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பாடத்திட்டக் குறைப்பின் அடிப்படையில் எத்தனை கேள்விகள், எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. குறைந்தபட்சம் 20 சதவீதம் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என ஆலோசிக்கிறோம். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.