1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தேன் சுவையை கூட்ட சீன சர்க்கரை கலந்து கலப்படமா? பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்




தேன் தயாரிப்பு

இந்தியாவில் விற்கப்படும் சில வகை தேனில், செயற்கையாக சுவையைக் கூட்ட சீன சர்க்கரை சிரப்பை சில தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவதை இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் சுத்தமான தேனை தயாரிக்க வேண்டுமானால், அதற்கு அரசு நிர்ணயித்துள்ள 18 அம்ச அளவீடுகளை அந்த தேன் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான தேன் ஆக கருதப்படும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் போன்ற சில வைரஸ் தொற்றுகளை குணமாக்க மருந்துடன் தேன் கலந்து உண்ணும் வழக்கம் உள்ளது. ஆனால், கலப்பட தேனால் அது பயனற்றதாகும் நிலை உள்ளது.

13 வகை தேன்கள் மீது பரிசோதனை

இந்த விவகாரத்தில் தேனின் தரத்தை அறிய 13 வகை தேன் ரகங்கள் கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதத்திலான காலகட்டத்தில் வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து சிறு கடைகள் மற்றும் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டன. அவற்றை ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவு பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்துக்கும் (CALF), தேசிய பால் மேம்பாட்டு வாரியத்துக்கும் ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைத்தார்கள்.

அதில் 8 தேன்கள், பதப்படுத்தப்பட்ட பெரிய நிறுவனத்தின் மாதிரிகள். 5 ரகங்கள் தனித்துவமானவை. அதில் நான்கு ரகங்கள் பதப்படுத்தாத பச்சைத் தேன் வகை.

ஒவ்வொரு ரகத்திலும் அதே தயாரிப்பு தொகுப்பைச் சேர்ந்த பல மாதிரிகள் வாங்கப்பட்டன. சில ரகங்கள், வெவ்வேறான தயாரிப்பு தொகுப்பாக இருந்தன.

இதில், குஜராத்தில் உள்ள இரண்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேன்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அமல்படுத்தி இருக்கும் புதிய மதிப்பீட்டு அளவைகள் சரியாக உள்ளதா என பரிசோதிக்கப்பட்டன.

அதில், சி3, சி4, ஃபாரின் ஒலிகோசாச்சரைடுகள், Specific Marker for Rice (SMR) போன்றவை தான் தேனில் முக்கிய கலப்பட அளவைகள்.

இதில் சி4 சர்க்கரை அளவு, சோளம், கரும்பில் இருந்து எடுக்கப்படும். சி3 சர்க்கரை, அரிசி, பீட்ரூட் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும். இது தவிர, ஒலிகோசாச்சரைடுகள் ஸ்டார்ச்சை அடிப்படையாகக் கொண்ட பாலி சாச்சரைடு சக்கரை, அரசி மற்றும் சோளத்தில் இருந்து எடுக்கப்படும்.

தேன் கலப்படம்

இதனால் இந்த மாதிரிகளின் தரத்தை அறிய அவை, ஜெர்மன் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு Trace Marker for Rice syrup (TMR) மற்றும் Nuclear Magnetic Resonance (NMR) profiling எனப்படும் பரிசோதனைக்கு அவை உட்படுத்தப்பட்டன.  இந்த இரண்டு பரிசோதனைகளும் தற்போதைய FSSAI தரத்தில் குறிப்பிடப்படவில்லை.

என்.எம்.ஆர் என்பது தேனின் கலப்படத்தைப் பார்க்க உதவும் ஒரு மேம்பட்ட சோதனை. ஆய்வு மேம்பட்டு வந்ததால், தேன் மாதிரிகள் இரண்டு ஆய்வகங்களுக்கு வெவ்வேறு கட்டங்களாக அனுப்பப்பட்டன.

இது குறித்து சிஎஸ்இ தலைமை இயக்குநர் சுனிதா நாராயண் கூறுகையில், "சுத்தமான தேன் என்ற பெயரில் பாதியளவு சர்க்கரை சிரப்புடன் தேன் தயாரிக்கப்பட்டாலும் அவை பரிசோதனையில் சரியானவையாக இருக்க வாய்ப்புண்டு. இதற்காக சி4, சி3 ரக பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனைகளில் அந்த தேன் சுத்தமானவை என முடிவுகள் வந்தாலும், ரைஸ் சிரப் எனப்படும் இனிப்புச் சர்க்கரை தன்மையை அறிய நடத்தப்படும் டிரேஸ் மார்க்கர் பரிசோதனையில் அவற்றில் கலக்கப்படும் செயற்கை சர்க்கரை அளவு தெரிந்து விடும்," என்று கூறினார்.

இந்த வகையில், சஃபோலா, மார்க்ஃபெட் சோனா, நேச்சர் நெக்டார் ஆகிய நிறுவனங்களின் தேன் தயாரிப்புகள் பரிசோதனையில் வெற்றி பெற்றன. என்எம்ஆர் பரிசோதனையில் தேன் தயாரிக்க பயன்படுத்தப்படும் கூறுகளின் அளவு கண்டறியப்பட்டாலும் அதில் எவ்வளவு கலப்படம் உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என்று சுனிதா நாராயண் தெரிவித்தார்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags