பொது தேர்வு வினாத்தாள் தயாரிப்பு தாமதம் ஏன்?
குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை இன்னும் முடிவு செய்யாததால், பொது தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு தாமதம் அடைந்துள்ளது.
கொரோனா பிரச்னையால் மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாதங்களை தாண்டிய நிலையில், இன்னும் திறக்கப்படவில்லை. அதேநேரம், உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளதால், அங்கு தொற்று பரவுகிறதா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவுகளின்படி, பள்ளிகளை திறக்கலாம் என, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், கொரோனா விடுமுறை காரணமாக, வகுப்புகளை நடத்தாததால், இந்த ஆண்டு பொது தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், குறைக்கப்பட்ட பாட விபரங்களை, பள்ளி கல்வித் துறை இன்னும் முடிவு செய்யவில்லை. இதன் காரணமாக, பொது தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொது தேர்வுக்கு, வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தாமதமாகி உள்ளன. எந்தெந்த பாடங்களில் இருந்து வினாக்கள் எடுப்பது என்பதில், குழப்பம் நிலவுகிறது. எனவே, தமிழக பள்ளி கல்வித் துறை, இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுத்து, எந்தெந்த பாடங்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என்ற, விபரத்தை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.