1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

புதிய வீடு கட்டுபவர்களுக்கு 10 வாஸ்து குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்

 

புதிய வீடு கட்டுபவர்களுக்கு 10 வாஸ்து குறிப்புகள் பின்பற்றுவது அவசியம்


வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும். இந்த சமநிலையே வாழ்க்கைக்கு செழிப்பைக் கொண்டுவருகிறது. எனவே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது இந்த பஞ்சபூதத்தை கணக்கில் கொள்வது தான் வாஸ்து.
நம் வாழ்வில் கட்டிடக் கலை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியை பெறலாம் என்பதோடு, வீட்டில் நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.
பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் சில பிரச்னைகள் சிக்கல்கள் ஏற்படுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வீட்டில் வாஸ்து சாஸ்திரப் படி எந்த அறைகள் எந்த திசையில் அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்...

பூஜை அறை
வீட்டில் மிக முக்கியமாக இருக்க வேண்டியது இறைவனை வழிபடக் கூடிய பூஜை அறை. இது வீட்டில் வட கிழக்கு பகுதியில் இருப்பது மிகவும் புனிதமானது. சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும் படி வைக்க வேண்டும். இந்த திசையில் சேமித்து வைக்கக் கூடிய அறை இருக்கலாம்.இந்த பகுதியில் சமையல் அறை, கழிப்பறை, உள்ளிட்டவை இருப்பது ஆகாது.

துளசி மாடம்
முன்னோர்கள் பெரும்பாலான வீட்டில் துளசி மாடம் வைத்திருந்தனர். புனிதமான மற்றும் மருத்துவ குணம் நிறைந்தது துளசி. வீட்டில் துளசி மாடம் இருந்தால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்க வல்லது. அதோடு துளசி சுற்றுச் சூழலை காத்து, காற்றை தூய்மைப் படுத்தும் ஆற்றல் கொண்டது.இது வீட்டில் முன் இருப்பது நல்லது. குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.

விளக்கு ஏற்றும் திசை
வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் பூஜைக்காகவோ, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது. விளக்கு என்பது வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தைக் கொண்டு வரக்கூடியது.வீட்டில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றாமல், இரண்டு ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதே போல் வீட்டின் துளசி மாடத்தில் ஒரு விளக்கேற்றுவது அவசியம். விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. தெற்கு நோக்கி ஏற்றுதல் ஆகாது.
படுக்கையறை
வீட்டின் முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவரின் உடல் மற்றும் மன சமநிலைக்கு முக்கியமானது. தூக்கம், ஓய்வு எடுக்கக் கூடிய படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் உகந்தது.

தூங்கும் திசை
அதே போல் நாம் படுத்து தூங்கும் போது தெற்கில் தலை வைத்து படுக்கலாம். கிழக்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நன்மையைத் தரக்கூடியது. வடக்கில் தலை வைத்து படுக்கவே கூடாது.
கிழக்கு நோக்கி தலையுடன் வைத்து தூங்கும் மாணவர்களுக்கு நேர்மறை ஆற்றல், ஞாபக சக்தி அதிகரிக்கும்.வடக்கில் தலை வைத்து படுத்தால் நோய், கனவுகள் மற்றும் தூக்கமின்மை ஆகியவை மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். எனவே படுக்கும் போது தலையை வடக்கு திசையில் வைக்கக்கூடாது.

சமையலறை
தென் கிழக்கு பகுதி அக்னி மூலை ஆகும். அதனால் வீட்டின் தென் கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைவதும், கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்.அல்லது பூஜை அறைக்கு அருகில் இருக்கலாம். ஆனால் கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை அல்லது பூஜை அறை இருப்பது நல்லதல்ல.

கிணறு அமைந்திருக்கும் இடம்
முன்பு வீடு கட்டத் தொடங்கும் முன் தண்ணீர் தேவைக்காக கிணறு தோண்டுவது வழக்கமாக இருந்தது. கிணறு என்பது வெறும் நீர் தேவைக்காக மட்டுமில்லாமல் வீட்டின் சௌபாக்கியங்கள் அதிகரிக்கும்.வீட்டிற்காக கிணறு தோண்டும் போது வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு பக்கத்தில் தோண்டுவது மிக அவசியம். வீட்டின் நடுவில் கிணறு அமைப்பது எதிர்மறை பலன்களைத் தரும். கிணறு அமைந்துள்ள இடத்தில் சூரிய ஒளி படும் வகையில் இருப்பது அவசியம்.

குளியல் அறை
உடலை சுத்தப்படுத்திக் கொள்வதற்கான இடம் குளியல் அறை. குளிப்பதால் உடல், மன அழுத்தம் குறையும். இந்த குளியலறை நம்முடைய எதிர்மறை சக்திகளை நீக்கக் கூடியது. இது சூரிய வெளிச்சம் படும் வகையில் அமைய வேண்டும் என்பதால் கிழக்கு பகுதியில் குளியலறை அமைப்பது மிகவும் நல்லது. மூடப்படாமல், சூரிய ஒளி படும் வகையில் அமைக்க வேண்டும்.

படிக்கட்டுகள்
வீட்டின் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். இந்த திசையில் கட்டப்படுவதால் எதிர்மறை ஆற்றலையும் தடுக்கிறது
படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டு கட்டக்கூடாது.

மரங்கள்
மரங்கள் வீட்டிற்கு மட்டுமில்லாமல் சமூகத்திற்கு முக்கியமானது. வீட்டில் மரங்கள் இருப்பதால் நல்ல சுத்தமான காற்று பெற முடியும். எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் அண்டாது. வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்கள் வளர்ப்பது நல்லது. தெற்கு பகுதியில் மரங்கள் வளர்க்க மிகவும் உன்னதமானது. மரக் கிளைகளை வீட்டின் மேல் செல்வது கூடாது. வீட்டில் தென்னை மரம், வேப்பம், மா மரங்களை வீட்டில் நடவு செய்யலாம்.
Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags