மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள்",
மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 26.08.2020 (புதன்கிழமை) பிற்பகல் 3.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று நோடிஃபிகேஷன் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் – 2 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் “Application for retotalling / revaluation” என்ற தலைப்பினை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 31.08.2020 (திங்கள்கிழமை) காலை 10.00 மணி முதல் 02.09.2020 (புதன்கிழமை) மாலை 5.00 மணிக்குள் தேர்வர் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடுபாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-
மறுகூட்டல்-2
உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.