நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரோனா பேரிடர் காரணமாக வளைகுடா நாடுகளில் இந்திய மாணவர்கள் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில், நீட் தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வின் இன்றைய விசாரணையில், தேசிய தேர்வு முகமை இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது சாத்தியமல்ல. இது பல குழப்பங்களை, குளறுபடிகளை ஏற்படுத்தும். அதேபோன்று கூடுதல் மையங்களை ஏற்படுத்துவது சாத்தியமல்ல. போதிய கால அவகாசத்துடனே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வை ஒத்திவைப்பதும் சாத்தியமாகாது. எனவே, திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, வளைகுடா நாடுகளில் உள்ள தேர்வர்கள் பலர் கேரளத்தைச் சேர்ந்தவர்.
மேலும், இதுதொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.