1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மன அழுத்தம் உடையவர்களுக்கு டென்ஷன் குறைய சில ஈஸியான வழிகள்

 




மன அழுத்தம் உடையவர்களுக்கு டென்ஷன் குறைய சில ஈஸியான வழிகள்:


1. மன அழுத்தமாக & டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.


2. அவ்வாறு அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள். இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.


3. அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.


4. மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.


5. தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.


6. அல்லது முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.


7. டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம் நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவது அவசியம்.


8. முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.


9. எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம்.


10. சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags