தொடக்க கல்வி 'டிப்ளமா' 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு
எட்டாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான பொதுத் தேர்வும், ஆசிரியர் பணிக்கான தொடக்க கல்வி 'டிப்ளமா' தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுத் துறை அறிவிப்பு:பள்ளி வழியாக இல்லாமல், 8ம் வகுப்பில் நேரடியாக தேர்ச்சி பெற விரும்பும் தனி தேர்வர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் தேர்வு நடத்தப்படுகிறது. ரத்துஇந்த ஆண்டு ஏப்ரல், 2 முதல், 9 வரை நடத்தப்படவிருந்த தனி தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு, கொரோனா நோய் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த தேர்வு, மீண்டும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, செப்., 29ல், தமிழ் தேர்வு நடக்கிறது. செப்., 30, ஆங்கிலம்; அக்., 1, கணிதம்; அக்., 3, அறிவியல் மற்றும் அக்., 5ல் சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. காலை, 10:00 மணி முதல் பகல், 12 மணி வரை தேர்வு நடக்கும்.அதேபோல், தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா தேர்வும், செப்., 21ல் துவங்க உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, செப்., 21 முதல், 28 வரை தேர்வு நடத்தப்படும்.
இரண்டாம் ஆண்டுக்கு, செப்., 29 முதல், அக்., 7 வரை தேர்வு நடத்தப்படுகிறது. காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும்.டிப்ளமா தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தட்கல் சிறப்பு அனுமதிவிண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஏற்கனவே தேர்ச்சி பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களையும் இணைத்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.வரும், 25 முதல், 27 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்க தவறுவோர், வரும், 28 மற்றும், 29ம் தேதிகளில், தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில்கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியில் அனுப்பும்விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.