
கூகுள் நிறுவனம், வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் ‛கோர்மோ ஜாப்ஸ்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனைப்போக்க, வேலைவாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'லிங்க்ட்இன்' நாகுரி, டைம்ஸ்ஜாப்ஸ் உள்ளிட்ட சில தளங்கள் உள்ளன. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி, ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு வங்கதேசத்திலும், 2019ல் இந்தோனேஷியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோர்மோ ஜாப்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ரெஸ்யூம் உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும். இந்த ஆப் மூலம் உங்கள் படிப்பு, வயது, இருப்பிடம், தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களின் அடிப்படையில் உங்களுக்கான பொருத்தமான வேலைகளைப் பரிந்துரை செய்யும். மேலும், துறை சார்ந்த வேலைகளையும் தனியாக தேட முடியும். ஏற்கனவே, கூகுள் இணையதளத்தில் ஜாப்ஸ் என்று தனிப்பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.