வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா அமைப்பு கடந்த வாரம் தனது ‘ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ்' என்ற புதிய முன்னெடுப்புக்குத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை நியமித்தது.
இதற்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது:
மனிதர்களை பொறுத்தவரை சிறந்த விஷயங்கள் கூட சில நாட்களில் போர் அடித்துவிடும். வாழ்க்கையின் எந்த ஒரு தருணத்திலும் அந்த சலிப்பு ஒரு மனித குணமாக இருக்கும். புதிய விஷயங்களை செய்வதில் மூலம் தான் அதை போராடி வெல்ல முடியும்.
நம்முடைய வலது கரத்தால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்யமுடிந்தால் அதை இடது கையாலும் செய்ய பழகிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். எனவே நம்முடைய சொகுசுகளிலிருந்து வெளியே வந்து புதிய விஷயங்களை செய்ய வேண்டும்.
இப்போதும் கூட நான் சும்மா உட்கார்ந்திருந்தால் மாயாஜாலம் நிகழ்ந்து விடாது. நான் தொடர்ந்து எனக்கு சவால் விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் சில நாட்களிலேயே,அந்த மாயாஜாலங்கள் எல்லாம் மறைந்து மூளை செயலற்றுப் போய் விடும். நாம் ஒரு விஷயத்தை செய்து முடித்து விட்டால் அதிலிருந்து விலகிப் போய் விட வேண்டும்.ஒரே உணவை கூட நம்மால் தொடர்ந்து 5 நாட்களுக்கு உண்ண முடியாது. இது கலை, சினிமா, எழுத்து அனைத்துக்கும் பொருந்தும். எப்போதும் ஒரே போன்ற விஷயங்களை உடைத்து வெளியே வருவதற்கான வழிகளை காண வேண்டும்.
இந்தியாவிலிருந்த் தேர்ந்தெடுக்கப்படும் திறமையாளர்கள் உலகளாவிய மேடைகளை அலங்கரிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.