1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அறிவியல் தகவல்கள் துளிதுளியாய் --விலங்கியல்

துளி_தகவல்கள்

#விலங்கியல்:

◆முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.

◆நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

◆உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 45 miles/hour.. இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

◆இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.

◆Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

◆பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

◆விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

◆உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

●Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று).

◆Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.

◆விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

◆தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

◆நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

◆ தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

◆Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags