1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ரயில்வேயில் வேலை வேண்டுமா?

ரயில்வேயில் வேலை வேண்டுமா? ஹூப்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/2020(Sports)

பணி: Sports Person (Sports Quota)

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில, பல்கலை அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தபட்சம் மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதி, கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.

கட்டணத்தை Crossed Indian Postal Order-ஆக செலுத்த வேண்டும். Indian Postal Order-ஐ Assi.Personnel Officer/HQ & Genl, South Western Railway, Hubbali. என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து  சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 28.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.rrchubli.in/Recruitment_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags