ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என, அறிவிக்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில்,2013ல், நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி உள்ளது. ஆறு ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனங்களே நடத்தப்படாதது, மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.பீஹார், ஹரியானா மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள், நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
அதேபோல், தமிழகத்திலும் மாற்றப்பட வேண்டும்.அதன் வாயிலாக, ஆசிரியர் பணியை எதிர்பார்த்து, ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும், 80ஆயிரம் பேர் வாழ்வில், அரசு ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.