1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வித்தியாசமான காரணத்துக்காக ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார்.

 

தன் கணவரின் அளவுக்கதிகமான அன்பை தன்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கடந்த 18 மாதங்களில் ஒருமுறை கூட சண்டைபோடவில்லை என்று ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார்.


உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் திருமணமாகி 18 மாதங்களிலேயே விவாகரத்துக் கோரியுள்ளார். விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர் சொன்ன காரணம் நீதிமன்றத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், அவர் கணவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை. அளவுக்கதிகமாக நேசிக்கிறார் என்பதுதான் அவருடைய பிரச்னை.

இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானின் அறிக்கைப்படி, அந்த பெண்ணுக்கு கணவரின் அதீத அன்பை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், கடந்த 18 மாதங்களாக ஒருநாள் கூட சண்டை போடாததால் சோர்வடைந்து விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணின் கணவர் சமைப்பதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும்கூட உதவுகிறாராம்.

ஒருநாள்கூட அவரிடம் கத்தாமல், எந்தவொரு பிரச்னையிலும் ஏமாற்றாமல் இருக்கிறாராம். இவ்வளவு அன்பால் அந்த பெண்ணுக்கு மூச்சே திணறிவிடுவதாகவும் கூறியிருக்கிறார். அந்த பெண் ஏதாவது தவறு செய்தால்கூட கணவர் மன்னித்துவிடுகிறாராம். ஆனால் அந்தப் பெண் சண்டைபோட விரும்புகிறாராம். எல்லாவற்றையும் இப்படி ஒத்துப்போகும் ஒரு நபருடன் வாழ விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
விவாகரத்துக்கான காரணத்தைக் கேட்ட நீதிமன்ற அலுவலர் இந்த மனு அற்பமான காரணத்தைக் கொண்டுள்ளதாக நிராகரித்துவிட்டார். இந்த மனுவை உள்ளூர் பஞ்சாயத்திடம் கொண்டுசென்றிருக்கிறார் அந்தப் பெண். வேறு ஏதும் காரணம் இல்லாததால், அவர்களும் அதை நிராகரித்துவிட்டனர்.


இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், அவள் ஒருதவறும் செய்ததாக நான் நினைக்கவில்லை. எப்போதும் சரியான ஒரு கணவராக இருக்க மட்டுமே தான் விரும்புவதாக கூறியிருக்கிறார். தனது மனைவியின் விருப்பப்படி, மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு அந்த பெண்ணின் கணவரும் ஷரியா நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவர்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறு அனுப்பிவைத்திருக்கின்றனர்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags