1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உஷார்! வங்கிக் கணக்கை பாதுகாக்க சில வழிமுறைகள்

 வங்கிக் கணக்கை பாதுகாக்க Facebook -ல் பிறந்த நாள் ,செல் நம்பரை நீக்குக! காவல் துறை வேண்டுகோள்    

✍️இன்டர்நெட் பேங்கிங் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் உங்கள் பேஸ்புக் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பரை தங்கள் பாதுகாப்பிற்காக நீக்கி விடும்படி நெல்லை மாவட்ட போலீசார் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


✍️இணையதள வசதி கொண்ட வங்கி கணக்கை ஹேக்கர்கள் எப்படி ஹேக்கிங் செய்கிறார்கள் என்பது பற்றி நெல்லை போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் உஷார் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 அதன் விவரங்கள் பின்வருமாறு :


✍️1.முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.


2.இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிப்பதன் மூலமாக உங்கள் அலைபேசி எண் மற்றும் பான் கார்டு நம்பரை பெற்று கொள்வார்கள்.

இதன்மூலம் அவர்களுக்கு பான் கார்டு நகல் கிடைத்துவிடும்.


3.அதன் பின்பு அவர்கள் காவல் நிலையத்தில் மொபைல் திருட்டு போய்விட்டதாக புகார் பதிவு செய்வார்கள்.

பின்பு பான் கார்டு மூலம் அதே எண்ணிற்கான மற்றொரு சிம் கார்டை மொபைல் கம்பெனியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.


4.அவர்கள் பெற்ற சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக தற்போது அவர்களுக்கு உங்கள் பேங்க் அக்கவுன்டை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.


5.பின்பு பேங்க் அக்கவுண்ட் இணைய முகவரிக்கு சென்று "Forgot my Password " தேர்வினை கிளிக் செய்வார்கள்.

பின்பு எளிதாக பின்கோடு மற்றும் அனைத்து தரவுகளும் அவர்களிடம் இருக்கும் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதனால் உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags