போலி முகவரி கொடுத்து, 'சூனா பானா' என்ற பெயரில், 'இ - பாஸ்' வாங்கியது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், பல்லடம் இந்திராநகர் என்ற தவறான முகவரியில் இருந்து, 'டிஎன், 01 எக்ஸ் 0000' என்ற வாகன எண்ணில், திருமண நிகழ்ச்சிக்காக மதுரை செல்ல, ஆதாரின் கடைசி நான்கு இலக்கம், '7373' என பதிவு செய்து, 'சங்கி மங்கி'யின் மகன் 'சூனா பானா' என்ற பெயருடன், மதுரை செல்ல இ - பாஸ் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இ - பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இது, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சரிபார்ப்பு எதுவுமின்றி, தானியங்கி முறையில், இ - பாஸ் வழங்கப்படுவதால், சிலர் தங்களது விளையாட்டை துவங்கி உள்ளனர். இந்த தகவல் அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது, ''தவறான முகவரியை பயன்படுத்தி, மதுரைக்கு இ - பாஸ் பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில், அனுமதியும் அளித்துள்ளனர். இது குறித்து, மாநில அளவிலான கண்காணிப்பு குழுவிடம் புகார் அளிக்கப்படும்,'' என்றார்
.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.